இளைப்பாறு நெஞ்சே...
🛌🛌🛌🛌🛌🛌🛌🛌
விடியல் துவக்கி, அடையல் வரை
உடையா நெஞ்சே இளைப்பாறு.
உறுதியோடு எனைக்காத்தாய் ,
ஓயாத இமையெனக்காத்தாய்,
இதயங்காத்தாய்.
வல் வினை வென்று, வருத்தம் கொன்று,
பகல் காத்தாய், பணி காத்தாய்.
அநேக முடிவுகள், அவசர முடிவுகள்,
அனைத்தும் காத்தாய்.
சிலர், பலர், அநேகர்,
அறிமுகமற்றோர் என
எவரவர் நடுவிலும்
கண்ணியங்காத்தாய்.
நான் தனியாளன்று
ராணுவமெனும் துணிவு தந்தாய்.
நில்லா என்வாழ்வுப்பயணத்தில்
நிர்மலம் தந்தாய்.
இளைப்பாறு நெஞ்சே.
நாளையாம் விடியலுக்கு
இன்றாம் மாலையில் ஓய்வெடு.
நாளை உனது நாள்!
A Gladys Stephen rest!
Comments
Post a Comment