இட்லிப்பூ💮💮💮💮
பணி நடுவே சன்னலோரக்காற்றில் மலர் பிம்பங்கள்.
நிழல் தருக்கள்.
பார்வையாம் வருடல்களில் வெட்கித்தலைகுனிபவை சில கர்வமாய் நிற்பவை சில.
நீ யாரடி மலரே?
கொத்துப்பூவாய் கொள்ளை கொள்ளும் உன் பேர் சொல்லவே ஆசை.
வறண்ட பாலைகளில் மலர் காட்சியென்பது ஆறுதல்.
மனப்பாலைகளில் சுகந்த ஞாபகங்கள்
சுகமானவை.
சில வாசங்கள் சுவாசங்களிலிருக்கும்.
ஜீவனின் உள்ளேயும் சில ஞாபகத்தருணங்கள் கற்றுத்தரும் வாசங்கள் அழிவதில்லை.
அவைகளுக்கு பெயர் சூட்டுவதென்பது பெருந்தவறு!
Santan flower!
A Gladys Stephen college campus flower!
Comments
Post a Comment